in

சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


Watch – YouTube Click

சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

 

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து வரும் 23ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

திருவாரூர் மாவட்டம் கர்த்தநாத புரத்தைத் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் தனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், மேலும் எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும், மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள தங்களுக்கு சொந்தமான, ரூ. 20 கோடி மதிப்பிலான சுமார் 1 லட்சம் சதுரடி நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி அமுதா, அவரது கணவர் மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவர் மனோகரன், மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு, திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீஸார் கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் முதல், வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மனோகரனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார்
முதல் குற்றவாளியாக உள்ள அமுதா தலைமறைவாகியிருந்த நிலையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அமுதாவின் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரத்து செய்ய வேண்டுமென கோரினர்.

அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து அமுதாவை நீக்கி உத்தரவிட்டது.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அமுதா சார்பில் அணுகியதால் உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் 3 நாட்களுக்குள் விசாரணை நீதி மன்றமான திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் அமுதா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து இன்று அவர் நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜரானார்.

இதனையடுத்து அவரை 23.02.2024 வரை சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார் இதனையடுத்து அவர் திருவாரூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தேர்தலில் போட்டிடுவது சஸ்பென்ஸ் என கூறினார்