in

ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தலைவர் 171 படத்தில் லோகி செய்யபோகும் மாஸ் சம்பவம்

ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தலைவர் 171 படத்தில் லோகி செய்யபோகும் மாஸ் சம்பவம்

தற்பொழுது வேட்டையன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லோகேஷ் அதிரடியாக பல மாற்றங்களை கதைகள் செய்திருக்கிறார். வழக்கமாக லோகேஷ் இயக்கும் அனைத்து படங்களிலும் இயக்குநர் ரத்னகுமார் ஸ்கிரிப்ட் வேலைகளில் பணியாற்றுவார்.

ஆனால் ரத்னகுமார் புதிய படத்தில் கமிட்டானத்தால் இந்த படத்தில் அவர் script எழுதவில்லை அதனால் லோகி பிரபல இயக்குநர்களுடன் இணைந்து ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏன்னென்றால் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் இரண்டாம் பாதியில் சொதப்பி விட்டதாகவும், லாஜிக் மீறல்கள், இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

லோகிக்கு தெரியும் தலைவர் படத்தை சொதப்பிவிட்டால் ரசிகர்கள் சங்கம் சங்கு ஊதிடும் என்று, மேலும் தலைவர் 171 படம் இரண்டு பாவங்களாக வெளி வருகின்றன என்ற தகவல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்தது போல் ஆகிவிட்டது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளையும் ஒரே மூச்சில் எடுத்து முடித்து வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ஆனாலும் இதுவரை பட குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை.

What do you think?

சாட்டை பட நாயகனுக்கு எதனால் திடீர் திருமணம்

பிரபல நடிகருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை