காவலரை பணி இடை நீக்கம் காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இளைஞரை கண்மூடித்தனமாக நெஞ்சில் உதைத்த காவலரின் வீடியோ வைரலாகிய நிலையில் காவலரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு
தென்காசி மாவட்டம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த அன்ஸ்டன்(26) எனும் இளைஞர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தமாக காண்ட்ராக்ட் மூலம் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள்
மூவரையும் மடக்கி பிடித்து இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை பிடுங்கியதாக கூறப்படுகிறது.
இதில் சாவியை திரும்ப கேட்டு அன்ஸ்டன் மற்றும் அவரது நண்பர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே அன்ஸ்டம் எனும் இளைஞரை காவலர் பிடித்து இழுத்து கீழே தள்ளி நெஞ்சில் கண்மூடித்தனமாக உதைத்துள்ளார். இந்த வீடியோ கட்சியானது தற்போது வெளியாகி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இளைஞரை கொடூரமான முறையில் தாக்கிய காவலர் அழகு துரையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அதிரடி உத்தரவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.