தஞ்சை ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை விவசாயிகள் மறித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை விவசாயிகள் மறித்து ஆர்ப்பாட்டம் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு
வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை நிர்ணயம் செய்ய வேண்டும்
விவசாயிகளின் உற்பத்திக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் நிலையில் இன்று தஞ்சை ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சோழன் விரைவு ரயிலை மறிக்க உள்ளே நுழைய முற்பட்டபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் பேரிகாடை இழுத்து கீழே தள்ளிவிட்டு விவசாயிகள் ரயில் நிலையத்திற்குள் உள்ளே புகுந்தனர் பின்பு தண்டவாளங்களில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு சோழன் விரைவு ரயில் வந்தபோது ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.