in

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாமக தயாராக உள்ளது மழுப்பல் பதில்


Watch – YouTube Click

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாமக தயாராக உள்ளது மழுப்பல் பதில்

புதுச்சேரியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் கட்சி பணிகளை மேற்கொள்வது குறித்தும் பாமகாவை அனைத்து தொகுதிகளிலும் பலப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையம் பாமக அலுவலகத்தில் நடைபெற்றது..

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மற்றும் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் செயல்படாத புதுச்சேரி அரசை கண்டித்து ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கணபதி

புதுச்சேரியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை போராடி மக்களுக்கு கொண்டு வந்துள்ளோம். புதுச்சேரியில் உள்ள 20 தொகுதிகளிலும் பாமகவை வலுப்படுத்தி வருகிறோம். முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது எதையும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்..

மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய அயராது பாடுபடுவோம் எனவும் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாம் இது குறித்து தலைமையிடம் தெரிவித்தீர்களா எனக்கு கேள்வியை எழுப்பியதற்கு புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு பாமக தயாராக உள்ளது.

ஆனால் தலைமை தான் முடிவு எடுப்பார்கள் என மழுப்பலான பதிலை தெரிவித்ததால் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதற்க்கு விருப்பமில்லை என்பது தெரிய வருகிறது…


Watch – YouTube Click

What do you think?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் 9.5 கோடி ரூபாய்

வெளிநாட்டினரை கவர்ந்த புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் இசை, நாட்டிய விழா