வெளிநாட்டினரை கவர்ந்த புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் இசை, நாட்டிய விழா
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் இசை, நாட்டிய விழாவில் பரதநாட்டியம், தப்பாட்டத்தை ஏராளமான வெளிநாட்டினர், உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து இசை, நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா மற்றும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரியில் கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலை அம்பேத்கார் மணிமண்டபம் எதிரே நடைபெற்ற நிகழ்வில் இன்று நாட்டிய சக்ரா கிருத்திகா ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய அறங்கேற்றம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தமிழர்களின் தப்பாட்னமும் நடைபெற்றது. இதனை ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளுரை சேர்ந்த பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தனர். தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.