வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது உறுதி
எவ்வளவு தடை வந்தாலும் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது உறுதி எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச்சு
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 100 கோடி மதிப்பீட்டில் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சர்வதேச மையம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வடலூரில் சத்திய ஞான சபையில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச்சுகையில்
வள்ளலார் சத்திய ஞான சபை அமைக்க நிலம் வழங்கிய பார்வதிபுரம் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் 100 கோடியில் சர்வதேச மையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் வேண்டுமென்றே சிலர் அரசியல் ஆக்க முடிவு செய்து வருகின்றனர். அரசியல் ஆக்க கூடாது இந்த பெருவெளியில் உள்ள 77 ஏக்கரில் மூன்று ஏக்கர் மட்டுமே பயன்படுத்த உள்ளது.
வள்ளலாரின் கொள்கையை உலக அளவிற்கு கொண்டு செல்ல இங்கு தியான மண்டபம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம் முதியோர் இல்லம் கழிப்பறை வசதி உட்பட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது.
சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது நகரின் கட்டமைப்பு மாறும் பொருளாதார வசதி மேம்படும் இந்த சர்வதேச மையம் அமைப்பது குறித்து மூன்று முறை கருத்து கேட்டு கூட்டம் நடத்தி இதனை அமைக்க முடிவு செய்தனர்.
அதனை வேண்டுமென்றே சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்கின்றனர். மக்களுக்காக தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம் விமர்சிப்பவர்கள் சொல்லும்படி ஆட்சி நடத்த தேவையில்லை எவ்வளவு தடை வந்தாலும் சர்வதேச மையம் அமைக்கப்படும். என பேசினார்.