நெல்லையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி
நெல்லை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நிதி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்டுறங்கில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாக ரூபாய் 2.5 கோடி ரொக்க பணம் மற்றும் காசோலை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடன் வழங்கப்பட்டது.
நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம் முதல் கட்ட நிதியாக 35 லட்சத்தை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ சமூக நீதி சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தமிழகத்தில் சிறப்பான பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை மதிமுக வரவேற்கிறது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது.
கடுமையான நிதி நெருக்கடி மத்திய அரசின் குறுக்கீடு உள்ளிட்டவைகளை கடந்து தமிழக பட்ஜெட் சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தும் நிலை உள்ளது தமிழகம் பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது.
மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு 37,000 கோடி ரூபாய் வரை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழக மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
சவாலான நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ள பாதிப்பு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு நிலுவைத் தொகை வராதது போன்றவையின் காரணமாகவே தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளது.
நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் விருதுநகர் திருச்சி ஈரோடு உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
எண்ணிக்கை முடிவான பின்னரே தொகுதி குறித்து மதிமுக அறிவிப்பு வெளியிடும் விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மதிமுக தொண்டர்கள் விருப்பமாக உள்ளது.
கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொருத்து வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும். மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துவிட்டது. குறுகிய காலத்தில் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை சந்திக்க முடியாத நிலை இருந்ததால் மாற்று சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டோம் தற்போது தனி சின்னத்தில் போட்டியிடுவதே எங்களது விருப்பம்.
இது குறித்து கூட்டணியும் கட்சித் தலைமையும் முடிவு செய்யும் என தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் மட்டுமே வெளியேறியுள்ளது. வலுவான நிலையிலேயே கூட்டணி உள்ளது தொகுதி பங்கியீட்டை விரைவில் முடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
வாக்கு இயந்திரத்தை நம்பியே 370-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள் என தெரிவித்தார்.