in

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


Watch – YouTube Click

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

 

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

மதுராந்தகம் அருகே உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வடகிழக்கு பருவ மழைக்கு பின்னர் அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி, தட்ட வாயன், கரண்டி வாயன், வர்ணநாரை, பாம்புத்தாரா, வக்கா, நீர் காகம், கூழைக்கடா உள்ளிட்ட 23 வகையான அரிய வகை பறவையினங்கள் வருகை தந்து தற்போது 30 ஆயிரம் பறவைகள் உள்ளன.

இன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சரணாலயத்தின் பார்வையாளர்கள் நடைமேடை, ஏரிக்கான நீர் வரத்து, பறவைகள் வருகை காலம்,சரணாலய வளர்ச்சி, பறவைகள் குறித்த காட்சி கூடத்தில் பறவைகளின் ஒளிரும் படம் சீரமைக்க வேண்டும் குறித்து செய்ய வேண்டிய பணிகள் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் வேடந்தாங்கல் வனசரக அலுவலர் லெஸ்லிடம் கேட்டறிந்தார்.

சரணாலயத்திற்கு பறவைகளை பார்வையிட வருகை தந்திருந்து மாணவ, மாணவியரிடம் வேடந்தாங்கல் சரலாணலயம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசு வழங்கினார்.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், பொதுப்பணித்துறையின் பொறியாளர் சுப்பிரமணியன் இளநிலை பொறியாளர் பரத், வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழா