உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மதுராந்தகத்தில் உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுராந்தகம் ஏரி மருத்துவமனை சர்க்கரை ஆலை என பல்வேறு இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உங்கள தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கருங்குழி திடக்கழிவு மேலாண்மை திட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை, மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை நேரடியாக சென்று பணி குறித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது அங்கு வந்த மதுராந்தகம் விவசாயிகள் கடந்த இரண்டு வருடங்களாக விவசாயம் இன்றி தவித்து வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோல் ஏறிய தூர் வாரினால் மட்டும் போதாது விவசாய பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது அதையும் தூர் வார வேண்டும் விவசாயம் செய்ய முடியும் அதனால் எங்களுக்கு கால்வாய்களை தூர்வாரி தர வேண்டுமென விவசாயிகள் மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும், அச்சரப்பாக்கம் அனந்தமங்கலம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான முகாம் மற்றும் மனு வாங்குவது என இன்று காலையிலிருந்து மாலை வரை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.