in

கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்


Watch – YouTube Click

கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலிருந்து 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களை இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதில் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடம் கோதாவரி பெண்கள் விடுதி மகாநதி ஆண்கள் விடுதி ஆகிய அதிநவீன உள்கட்டமைப்பு கட்டடம் 95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.இந்த புதிய கட்டிடத்தில் மின்தூக்கி வலைதள இணைப்பு மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் 31.94 கோடி செலவில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கைலாஷ் சத்யார்த்தி கல்வி கட்டிடம் இசைத்துறை புள்ளிகள் மற்றும் பயன்பாட்டு கணித துறை, தோட்டக்கலை துறை, தொற்று நோயியல் மற்றும் பொது சுகாதாரத்துறை, நுண்ணுயிரியல் துறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய ஆறு துறைகளை உள்ளடக்கியது. அதேபோல கோதாவரி பெண்கள் விடுதி 300 படுக்கையுடன் 8177 சதுர மீட்டர் பரப்பளவு மகாநதி ஆண்கள் விடுதி 300 படுகைகளுடன் 8,117 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்சியினை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பதிவாளர் திருமுருகன் நிதி அலுவலர் கிரிதரன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா