in

முழு நேர அரசியல்வாதியா என்று என்னை கேள்வி கேட்கிறீர்கள்


Watch – YouTube Click

முழு நேர அரசியல்வாதியா என்று என்னை கேள்வி கேட்கிறீர்கள்

 

மக்கள் நீதி மய்யம் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது ” இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என கூறுகிறது. தேர்தலில் 95 லட்சம் மட்டும் செலவு செய்தால் என்ன ஆகும், கோவை தெற்கு தான் ஆகும்.

நான் கோவையில் தோல்வியடைந்தது 1,728 ஓட்டுகள் அல்ல எனது தோல்வியாக நான் கருதுவது எதை என்பதை சொல்கிறேன். அதுதான் நமது தோல்வியும், கோவையில் 90,000 பேர் வாக்களிக்கவில்லை, சொல்லப்போனால் நாட்டில் 40 சதவீதம் மக்கள் வாக்களிப்பதே இல்லை. அவர்கள் அனைவரும் வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

என்னை முழு நேர அரசியல்வாதியா ..? என்று என்னை கேள்வி கேட்கிறீர்கள்..? நீங்கள் 40 சதவீதம் வாக்களிக்காமல் முழு நேர குடிமகன்களாக கூட இல்லை, 95 லட்சம் மட்டும் செலவு செய்யக்கூடிய வேட்பாளர் ஒரு நேர்மையான வேட்பாளர் ஜெயிக்கவே முடியாது என தெரிவித்தார்.

என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து அழுத்தமாக நடைபெற்றுக் கொண்டே இருப்பேன் இந்த அரசியல் வேறு, அரசியல் செலவுகள் அனைத்துமே என் சொந்த சம்பாத்தியம் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வரும் 26 ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறப்பு