in

கவலைப்படாதீர்கள் ரசிகர்களே விஜய் சார் இடத்தை நான் நிரப்புகிறேன்

கவலைப்படாதீர்கள் ரசிகர்களே விஜய் சார் இடத்தை நான் நிரப்புகிறேன் 

 

பவர் ஸ்டார் போல் தற்போது புதிதாக ஒரு ஸ்டார் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதாவது வின்ஸ்டார் விஜய் என்ற பெயரில் எப்போதும் ராஜா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ள வின் ஸ்டார் விஜய் கூறியதாவது.

எப்போதும் ராஜாவை நான் 10 ஆண்டுகளாக எடுத்தேன். பணம் ரெடி பண்ண கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. இந்த படம் 25 ஊரில் உள்ள தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

தன் படத்தின் வெற்றி விழாவில் பேசிய போது பத்திரிகையாளர்கள் எப்பொதும் கேட்கும் முதல் கேள்வியான விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் அவரின் இடத்தை எந்த நடிகர் நிரப்புவார் என்றும் கேட்கப்பட்டது அதற்கு வின்ஸ்டார் அளித்த பதில் ஆவது யாரும் கவலைப்படாதீர்கள் ரசிகர்களே விஜய் சார் இடத்தை நான் நிரப்புகிறேன் என்று கூறிய வீடியோ வைரலாக ...ப்ரோ யாருடா நீ எங்கிருந்து வர என விஜய் ரசிகர்கள்காண்டாகி அவரின் வீடியோவிற்கு கிழ் கமெண்ட் செய்கிறார்கள்.

மேலும் நிடிசன்கள் கூறியதாவது 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரே அந்த இடத்தை நிச்சயம் நிரப்புவார் நீங்கள் overஆ ஆசை படாதிங்க என்றும் ட்ரோல் செய்து மீம்சுகளை பறக்க விடுகின்றனர்.

ஏனென்றால் ஏற்கனவே இந்த கேள்வியை ஜெயம் ரவியிடம் கேட்டபொழுது விஜய்யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் வின் ஸ்டார் கூறியதாவது ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் டைட்டிலில் அடுத்து நான் நடிக்கப் போகிறேன் என்றும் என் கைவசம் இப்பொழுது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது என்று ஏகத்திற்கு தன்னை பற்றி புகழ்ந்து தள்ளி ரசிகர்களின் வயிற்று எரிச்சலை வாரிகொண்டிருக்கிறார்.

சின்ன வயசுல இருந்தே எம்ஜிஆர், ரஜினி, விஜய் என எல்லாரையும் பிடிக்கும். அவங்களை பின்பற்றினாலே வெற்றி நிச்சயம் என்பதால் அவர்களை ஃபாலோ பண்ணி வருகிறேன் என்று புது ரூட் போடுகிறார்… பார்போம் இவர் Technique work out ஆகிறதா என்று.

What do you think?

சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசனை குண்டர் சட்டத்தில் கைதி செய்ய வேண்டும்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா