in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா


Watch – YouTube Click

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 8-வது திருநாளான சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.. பச்சை சாத்தியை முன்னிட்டு
சுவாமி சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதனை அடுத்து சுவாமி சண்முகர் பச்சை நிறப் பட்டுடுத்தி பச்சை நிற மலர்களால் அலங்கரித்து பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் அரோகரா கோசத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.


Watch – YouTube Click

What do you think?

இரண்டு லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சமரச கொடி

ஐந்தாயிரம் மாணவிகள் இணைந்து நடத்திய உலக சாதனை முயற்சி