இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை திறப்பு
பிரதமர் மோடி 2நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில் இந்தியாவின் மிக பெரிய ரயில்வே சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில் இணைப்பை (USBRL) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சுரங்க பாதையானது 48.1 கிமீ நீளமுள்ளது. பரமுல்லா முதல் சங்கல்டான் வரையில் பனிஹால் வழித்தடத்தில் இந்த சுரங்கப்பாதை உள்ளது. மொத்தம் 11 சுரங்கபாதைகள் இந்த வழித்தடத்தில் உள்ளது. அதில் T50 எனும் சுரங்கப்பாதை தான் இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட சுரங்கப்பாதை ஆகும்.
இந்த சுரங்கப்பாதை திட்டமானது கடந்த 1993ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2013ஆம் ஆண்டு அதற்கான டெண்டர் விடப்படடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பனிஹால் – காரி – சம்பா இடையே 48.1 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில்வே வழித்தடத்தில் 43.37 கிமீ தூரம் சுரங்கப்பாதை ஆகும்.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 16 பாலங்கள் உள்ளது. அதில் 11 சுரங்கபாதைகள் ஆகும். 4 சிறிய பாலங்கள் ஆகும். மொத்தம் 30 வளைவுகள் இந்த வழித்தடத்தில் உள்ளது. அதில் T50 எனும் 12.77 கிமீ தூரம் கொண்ட சுரங்கப்பாதை தான் இந்தியாவிலேயே மிக பெரிய ரயில்வே சுரங்கப்பாதை ஆகும்.
இந்த பெரிய சுரங்கபாதைகளில் ஒவ்வொரு 375 மீட்டர் தூரத்திலும் ஆபத்தில் வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ அணைக்கும் கருவிகளும் அந்த ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது.