முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோல போட்டி
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கோல போட்டியில் பங்கேற்ற மகளிருக்கு சுமார் 3 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை மாநில செயலாளர் அன்பழகன் வழங்கி பாராட்டினார்
புதுச்சேரி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா, புதுவையின் 30 தொகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் மாபெரும் கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம், நமது வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு, 40 தொகுதிகளிலும் வெற்றி நமதே உட்பட பல்வேறு கோலங்களை வரைந்து அசத்தினர். இதனை மாநில செயலாளர் அன்பழகன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு மகளிர்களை வெகுவாக பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, போட்டியில் பங்கேற்ற மகளிருக்கு வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ்,தையல் இயந்திரம், குக்கர் உட்பட சுமார் 3 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் , மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், முன்னாள் எம்எல்ஏ கோமலா ஆகியோர் உடனிருந்தனர்.