in

புதுச்சேரியில் புதிய பேருந்துகள் துவக்கவிழா


Watch – YouTube Click

புதுச்சேரியில் புதிய பேருந்துகள் துவக்கவிழா

 

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகள் துவக்கவிழாவில் இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

17.30 கோடி ரூபாய் செலவில் புதிதாக 38 பேருந்துகள் வாங்கப்பட்டது. இதில் 26 பேருந்துகள் புதுச்சேரிக்கும், 12 பேருந்துகள் காரைக்காலுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாஹே, நாகர்கோவில், சென்னை, பெங்களூர், கும்பகோணம், குமுளி, திருப்பதி, விழுப்புரம், கடலூர் ஆகிய தொலைதூர வழிதடங்களில் செல்கிறது. காரைக்காலில் இருந்து கோயம்புத்தூர், கும்பகோணம், சென்னை, சிதம்பரம் ஆகிய வழித்தடங்களில் செல்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

காரணம் ஒட்டுமொத்த பயணிகளின் ஆரோக்கியம் உங்கள் கையில் தான் உள்ளது என்றும் ஓட வேண்டிய பேருந்து ஒழுங்காக இருக்க வேண்டும். ஒழுகாத ஓட்டை உடைச்சல் இல்லாத பேருந்தாக இருக்க வேண்டூம். சில இடங்களில் பேருந்தில் ஓட்டை தான் இருக்கிறது.. ஓட்டையில் மக்கள் விழாத பேருந்தை நாம் இயக்குகிறோம் என்றும் கூறினார்.

விழா முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் போதை பொருட்களை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்பாக பிரதான பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இருப்பினும் புதுச்சேரியில் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறோம். பள்ளி மாணவர்கள் பக்கம் போதைப் பொருள் போகவே கூடாது. டிஜிபியை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி

திமுகவை விமர்சித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை