திருப்பாதிரிபுலியூர் பிடாரி அம்மன் கோவிலில் 79 ஆம் ஆண்டு 108 திருக்குட நன் நீராட்டு வைபவம்
அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ.- பாடலீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் 79 ஆம் ஆண்டு பந்தல் தொழிலாளர்கள் மற்றும நகரவாசிகள் சார்பில் விழா கோலம் பூண்டது கடலூரில் பாடலீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு பிடாரி அம்மன் அவர்களுக்கு பந்தல் தொழிலாளர்கள் சார்பில் விழாக்கோலம் – சப்த மாதாக்கள் நடுவில் அமர்ந்திருக்கும் பிடாரி அம்மனுக்கு 108 திருக்குட நன் நீராட்டு வைபவமும் பின்னர் உற்சவர் பிடாரி அம்மனுக்கு வண்ண அழகான மலர்களால் வெகு நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் மஹா தீபாரதனைக்கு பிறகு உற்சவர் அம்மன் ஊர்வலமாக மேளதாள மற்றும் நையாண்டி மேளம் என வாத்திய முழக்கத்துடன ஊர்வலமாக பிரதான மாட வீதி வழியாக அம்மன் புறப்படாகி வீடுகளில் உள்ள – பக்தர்களுக்கு அம்மன் – வீதி உலா காட்சி தந்தார் இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் இரா.சந்திரன் மற்றும் செயல் அலுவலர் திரு.சிவக்குமார் மற்றும் திருப்பாதிரி புலியூர் பகுதியை சார்ந்த பந்தல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்