புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஐந்து வயதிற்குட்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் புதுச்சேரியில் 63,853 குழந்தைகளும் காரைக்காலில் 12,257 குழந்தைகளும் மாஹே பகுதியில் 1,885 குழந்தைகளும் மற்றும் யானாம் பகுதியில் 3,539 குழந்தைகளும் மொத்தம் 81,334 குழந்தைகளுக்கு போடப்படுகிறது.
அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலக் கூடங்கள். அங்கன்வாடி மையங்கள் மற்றும் அவரவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் சொட்டு மருந்து போட்டு கொள்ளலாம்.
மேலும் இம்முகாம் மக்கள் அதிகம் கூடும் மற்றும் கடந்து செல்லும் இடங்களான பேருந்துநிலையம், இரயில்வே நிலையம் கடற்கரைச்சாலை, மணக்குள விநாயகர்கோயில், தாவரவியல்பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகுக்குழாம், போகோ லேண்ட், போத்திஸ், ப்ரொவிடன்ஸ் மால் ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.
புதுச்சேரி தமிழ்நாடு எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு. கன்னியகோயில், திருக்கனுர் மற்றும் குருமாம்பேட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் மற்றும் நடமாடும் போலியோ ஊர்திகள் மூலமாகவும் புதுச்சேரி பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இந்த வருடம் அதிக இடம்பெயரும் மக்களையும் இனம்கண்டு அவர்களுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியூரிலிருந்து விருந்தினர்களாக வந்திருக்கும் குழந்தைகளும் பயன்பெறலாம்.
இந்த முகாமினை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், சுகாதாரத் துறையின் இயக்குனர் ஸ்ரீ ராமுலு, துணை இயக்குனர் முரளி, மேலும் சுகாதாரத்துறை உதவி இயக்குனர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்….
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்… போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடுவது மிகவும் அவசியமான ஒன்று.. புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் முகம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் இருக்க நல்ல வாய்ப்பாக இந்த முகாம் நடத்தப்படுகிறது…
பாஜக முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கூட்டணி உறுதியான பிறகு வெளியாகவில்லை குறித்து கேள்வி கேட்டதற்கு…. புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை அவர்கள் தான் அறிவிப்பார்கள் என கூறினார்...
மேலும் புதுச்சேரியில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தப்படும் என்றும் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் பைப்பு நிதி வைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள் குறித்து கேட்டதற்கு.? அது பொய்யான தகவல் பிறந்த குழந்தைகளின் பெற்றோருடைய வங்கி முகவரி பெற்று அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்…. பாரத பிரதமர் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய புதுச்சேரி வருவாரா எனக் கேட்டதற்கு.? கண்டிப்பாக தேர்தல் வந்தால் வருவார் என கூறினார்….