போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
புதுச்சேரி…காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்…புதுச்சேரி-மரக்காணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் ஓட்டுனரான இவரது மகள் ஆர்த்தி. ஒன்பது வயதான இவர் அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்(2ம் தேதி) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்த்தி திடீரென காணாமல் போனார்.
மேலும் வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர், மகள் வராததால் அதிர்ச்சி அடைந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி தனியாக செல்லும் வீடியோ மட்டுமே பதிவாகியுள்ளது.
மேலும் சிறுமி விளையாடிய இடத்தின் அருகில் உள்ள அனைத்து வீடுகள், பாதாள சாக்கடைகள், என அனைத்து இடங்களிலும் போலீஸ் தேடியும் சிறுமி கிடைக்கவில்ல. சிறுமி மாயமானது தொடர்பாக எந்தவித தகவலும் தெரியாமல் தேடப்பட்ட போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து அவரது உறவினர்கள் புதுச்சேரி-மரக்காணம் முத்தியால்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆதரவாக அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன்,திமுக முத்தியால்பேட்டை பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் சிறுமி விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என உறுதியளிக்க போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழக முழுவதும் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் கடந்த 14ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சில கடத்திச் சென்றனர். இதில் போலீசார் மூன்று பேரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
இந்த நிலையில் சோலை நகர் சிறுமி மாயமாகி 45 மணிநேரமாகியும் இன்னும் கிடைக்காதது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.