நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி அரசு சித்த மருத்துவ கல்லூரியின் எதிர்கால நலனுக்காக தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து விதிகளின்படி புதிய கல்லூரியை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரியின் பாழடைந்த வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட 40 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு இன்னும் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது .
அதனை உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தினமும் காலை இதே போல் கருப்பு பட்டை அணிந்து ஒரு வாரத்துக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.