ஒரே வீட்டில் ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மரணம்….
ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ஆன டோலி சோஹி பல தொடர்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானவர். இவரின் சகோதரி ஆன அமந்தீப் சோஹியும் பல இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
டோலி சோஹிக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்தார், புற்றுநோய் தீவிரம் அடைந்து நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது சகோதரி அமந்தீப் சோஹிக்கு மஞ்சள் கமலை நோய் தாக்கி உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
தனது சகோதரி இறந்த தூக்கத்தை தாங்க முடியாத டோலி சோஹி வின் உடல் மேலும் கவலைக்கிடமானது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டோலி சோஹி அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தார்.
ஒரே வீட்டில் இரு சகோதரிகளும் உயிரிழந்த சம்பவம் திரை உலகையே உலுக்கியது.