கஞ்சா வியாபாரிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முழு ஆதரவு
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆதரித்து வருகிறார்.
பாஜகவை கட்சி சேர்ந்தவரே கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள்.
கஞ்சா வியாபாரிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முழு ஆதரவு. அவரது தொகுதியில் தான் அடிக்கடி கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதாக கூறினார்.
கஞ்சா வியாபாரிகளால் தான் வில்லியனூரில் பாஜக பிரமுகர் செந்தில் கொலை செய்யப்பட்டார்.
இப்போது சிறுமியும் கஞ்சா கும்பலால் தான் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் கைதானவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான் வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டிய வைத்திலிங்கம் எம்பி
இரண்டு கொலைக்கு பிறகும் உள்துறை அமைச்சர் திருந்த மாட்டாரா …? என கேட்டார்.
பேட்டியின் போது உடனிருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் ஆட்சியில் தான் கஞ்சா அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக கூறும் உள்துறை அமைச்சர் அப்போது காங்கிரஸ் அமைச்சரவையில் வகித்த அமைச்சர் பதிவை ராஜினாமா செய்திருக்க வேண்டிய தானே என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.