புதுச்சேரியில் முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச பால் கறவை இயந்திரங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் சுத்தமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பால் உற்பத்தியில் மனித ஆற்றல் பற்றாக்குறை நீக்கிடவும் எளிய முறையில் பால் கறவை செய்திடவும் புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக பால் கறவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார்.
சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது உறுதி அளித்திருந்தார்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த புதுச்சேரி அரசின் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் தகுதி வாய்ந்த 294 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ரூபாய் 42 ஆயிரம் மதிப்புள்ள பால் கறவை இயந்திரங்களை 100% மானியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடை துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் முன்னிலையில் விவசாயிகளுக்கு பால் கறவை இயந்திரங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
இத்திட்டத்திற்கென ரூபாய் ஒரு கோடியே 23 லட்சம் ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு, புதுச்சேரி கால்நடை துறையின் மூலம் பால் கறவை இயந்திரங்கள் வாங்கப்பட்டு வருகிறது.
வரவு செலவு திட்ட அறிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை புதுச்சேரி அரசு படிப்படியாக நிறைவேற்றி வருவதாக அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அப்போது தெரிவித்தார்…