ஆஸ்கார் மேடையில் பரபரப்பு நிர்வாணமாக வந்த ஜான் சீனா
ரசிகர்கள் அதிர்ச்சி!!
உலகின் மிகச்சிறந்த சினிமா விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்custom made football jerseys College Football Jerseys asu jersey Ohio State Team Jersey custom football jerseys ohio state jersey micah parsons jersey asu jersey custom made football jerseys Ohio State Team Jersey custom made football jerseys custom football jerseys custom football jerseys custom made football jerseys ohio state jersey ஏஞ்சல் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை நான்காவது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படமும், பார்பி திரைப்படம் 8 பிரிவுகளிலும் போட்டியில் உள்ளன. ‘புவர் திங்ஸ்’, ‘பால் ஆஃப் அனாடமி’, ‘மேஸ்ட்ரோ’, ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ உள்ளிட்ட பல படங்கள் பல பிரிவுகளில் விருதுக்கு போட்டியிட்டன.
சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை ’20 Days in Mariupol’ திரைப்படம் வென்றுள்ளது. இந்தியாவில் பிறந்த நிஷா பஹுஜா இயக்கிய ’To Kill the Tiger’ படத்துக்கு விருது கிடைக்கவில்லை. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த படத்தொகுப்புக்காக முதல் விருதை வென்றுள்ளது. பெண் எடிட்டர் ஜெனிஃபர் லேம் இந்த விருதை பெற்றார். பிரபல நடிகர் அர்னால்டு மேடை ஏறி ‘காட்ஸில்லா மைனஸ் ஒன்’ படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதினை வழங்கினார்.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்தார் ஜான் சீனா. அதன் பின்னர், மேடையிலேயே அவசர அவசரமாக ஆடை மாற்றி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ‘புவர் திங்ஸ்’ படத்துக்கு வழங்கினார்.
சிறந்த சர்வதேச திரைப்பட விருதை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்’ திரைப்படம் வென்றுள்ளது. அந்த படத்தை ஜோனதன் கிளாஸர் இயக்கி உள்ளார். ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’ படத்துக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஆஸ்கர் விருதை தவறவிட்டுள்ளது.
ஆஸ்கர் 2024 விருது விழாவில் சிறந்த தயாரிப்பு நிறுவனத்துக்கான விருதினை ‘புவர் திங்ஸ்’ தட்டிச் சென்றது. விருது விழாவில் ‘War Is Over’ திரைப்படம் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘தி ஹோல்டோவர்ஸ்’ படத்தில் நடித்த டாவின் ஜாய் ரண்டோல்ப் வென்றுள்ளார்.
‘ஓபன் ஹெய்மர்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை ராபர்ட் டவுனி வென்றார். சிறந்த தழுவல் படத்துக்கான விருது ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்’’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருது சிலியன் மர்பிக்கு ‘ஒப்பன்ஹெய்மர்’ என்ற படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது கிறிஸ்டோபர் நோலனுக்கு அதே படத்தை இயக்கியதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை என மொத்தம் ஆறு விருதுகளை அந்த படம் இதுவரை வென்றுள்ளது.