வங்கிப் பெண் ஊழியரை கடத்திய கந்துவட்டி கும்பல்
சிவகங்கை அருகே வங்கிப் பெண் ஊழியரை கடத்திய கந்துவட்டி கும்பல். பாதுகாப்பு வழங்க கோரியும் நடவடிக்கை எடுக்கக் கூறியும் சிவகங்கை SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவங்கி ஊழியர் புகார்.
சிவகங்கை அருகே பிரவலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மதுரையைச் சேர்ந்த சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
மதுரையில் வசிக்கும் இவரது தாய் தந்தையர் அருகிலுள்ள நபர்களிடம் சுமார் ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வட்டி பணம் ரூ 2 லட்சம் செலுத்தி உள்ள நிலையில் கந்து வட்டிக்கும்பல் பெற்றோர் வாங்கிய பணத்திற்காக அவர்களது மகள் சித்ராவை அவர் பணிபுரையும் சிவகங்கை மாவட்டம் பிரவலூரில் உள்ள வங்கியில் இருந்து மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் சித்ராவின் பெற்றோர்களை வரைவளைத்து அவர்களையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சித்ராவை விடுவித்த கந்து வட்டி கும்பல் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தன்னை கடத்திச் சென்ற கந்து வட்டி கும்பலிலிருந்து பாதுகாப்பு வழங்குமாறும், மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாறும் மதுரை கே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வங்கி பெண் ஊழியர் சித்ரா புகார் மனு அளித்தார். வங்கி பெண் ஊழியரை பெற்றோர் வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.