நிகழ்ச்சி நடத்துறேன்…இன்னு சண்டை மூட்டி விட்ட சேனல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சென்ற வாரம் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் அண்ணி வெர்சஸ் நாத்தனார் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆவுடையப்பன் இந்த வாரம் GUEST…ஆக வடிவுக்கரசி மற்றும் சத்திய பிரியா வருகை தந்தனர்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்களா அல்லது கண்டன்டுக்காக பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
எல்லை மீறி பேசும்பொழுது நம்மை எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே இதனால் நமக்கு குடும்பத்தில் என்ன பிரச்சனை வரும் என்று யோசிக்காமல் சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.
அப்படித்தான் சென்ற வாரம் நாத்தனார் என்ற தலைப்பில் ஒரு பெண் பேசினார். அதாவது கல்யாணத்திற்கு முன்பு என் அண்ணன் ஒரு டம்ளர் தண்ணி கூட எடுத்து குடிக்க மாட்டான் சாப்பிடும் தட்டை எடுத்து வைக்கவும் மாட்டான்.
ஆனால் கல்யாணம் ஆன பிறகு அண்ணிக்காக வீட்டு வேலைகள் எல்லாம் செய்கிறார் என்று கூறிய பொழுது அவர் அணியில் நடுவராக இருந்த வடிவுகரசி குறுத்திட்டு உங்கள் அண்ணன் எப்பொழுது எல்லாம் வேலையும் செய்கிறார் என்றால் அவரை உங்கள் அண்ணி தன் அன்பால் மாற்றிவிட்டார் ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் பொழுது அவர் எந்த வேலையும் செய்யவில்லை என்றால் தவறு உங்களுடையது.
உங்களுக்கு சாமர்த்தியம் பத்தவில்லை உங்கள் வளர்ப்பு சரியில்லை என்று தான் கூற வேண்டும் என்றார் அதற்கு கோபப்பட்ட அந்த பெண் பெற்ற தாய்க்கு செய்யத் தோன்றவில்லை ஆனால் தன் மனைவிக்கு செய்கிறார்.. என்றார். அதற்கு நடிகை சத்யபிரியா அதற்கு காரணம் உங்கள் அண்ணனுடைய சோம்பேறித்தனம் இன்று அவர் வேலை செய்கிறார் என்றால் அவர் குடும்பத்தின் மேல் அக்கறையும் அன்பும் தான் அதற்கு காரணம்.
முடிந்தால் நீங்கள் உங்கள் கணவரை உங்களுக்கும் எல்லா வேலையும் செய்ய கூறுங்கள் என்றார் உடனே அந்த பெண் எங்கள் அண்ணனை மாற்றிய எங்கள் அண்ணிக்கு நன்றி என்று கூறியதற்கு வடிவுக்கரசி நீங்கள் முழுமனதாக இதை கூறவில்லை என்று கூற இல்லை நான் எங்கள் என் அண்ணனை இப்பொழுது நான் புரிந்து கொண்டேன் என்று கூறினார்.
இவர்களுடைய சண்டை இதோடு ஓய்ந்ததா என்று தெரியவில்லை இதன் பிறகும் இவர்கள் குடும்பத்தில் இதனால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று இது போன்ற நிகழ்ச்சிகளால் நன்றாகவே தெரிகிறது. நிகழ்ச்சி நடத்துகிறேன் என்ற பெயரில் இவர்கள் குடும்ப சண்டைகளை தான் மேலும் வளர்க்கிறார்கள். சேனல்ளுக்கு பணம் வருது நிகழ்ச்சிக்கு வருவர்களுக்கு மானம் போகுது.