in

காவல்துறையில் 10,15,25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு நிகழ்ச்சி


Watch – YouTube Click

காவல்துறையில் 10,15,25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு நிகழ்ச்சி

 

புதுச்சேரி காவல்துறையில் 10,15,25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு 10 ஆண்டு பணிப்புரிந்தவர்களுக்கு தலைமை காவலர் பதவியும்,15 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு துணை உதவி ஆய்வளர் பதவியும், 25 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர் ஆகவும் சுமார் 2000க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது… புதுச்சேரி அமைதியான மாநிலம்.. அழகான மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது எண்ணம்.. அதனால்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர்..

புதுச்சேரிக்கு வந்தால் அமைதியாகவும் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்காகவே வருகிறார்கள்… சுற்றுலா பயணிகள் எந்த நேரத்திலும் வீதிகளில் வருகின்றனர் அச்சமின்றி நம்பிக்கையுடன் இது எப்போதும் இருக்க வேண்டும்..

புதுச்சேரியில் அதிக அளவில் கொலைகள் நடைபெற்றது தற்போது அதை நாம் குறைத்துள்ளோம்.. தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது தான்… இதில் காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட வேண்டும் ஒரு சமுதாயத்தை சீரழிக்கின்றதாக இருக்கிறது… இளைஞர்கள் வருங்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் அப்பொழுது மாநிலமும் நாடும் வளமும் நன்றாக இருக்கும்... இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பது காவல்துறையின் கடமை… போதைப் பொருட்கள் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதில்லை வெளியில் இருந்து வருகிறது அதனை தடுப்பதற்கு காவல்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஆரம்பத்திலேயே அதைத் தடுத்துவிட்டால் புதுச்சேரி உள்ளே வராமல் இருக்கும் இதனால் போதைப் பழக்கத்திற்கு இளைஞர்கள் ஆளாக மாட்டார்கள்..

பள்ளிகள் கல்லூரிகள் சுற்றியுள்ள காவலர்கள் ரோந்து பணியில் இருந்து ஆரம்பிக்கும் பொழுது அதட்டல் கொடுக்க வேண்டும் இது யாருக்காகவோ பயந்தோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை… யாருக்கும் பயப்படாமல் எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்களை கட்டுக்குள் கொண்டு வருவது உங்களுடைய கடமை..

அனைத்து காவல் நிலையங்களில் உள்ள எல்லைகளை சுற்றி வந்து காவலர்கள் கண்காணிக்க வேண்டும்.. போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து, அதனை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும் அது உங்களுடைய கடமை.. இதுபோன்று செயல்பட்டால் இளைஞர்கள் சீரழிக்கப்படுவது தடுத்து நிறுத்த முடியும் நல்ல மாநிலம் நல்ல நாடு உருவாக வேண்டும் என்றால் தற்போது போதை பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.. இந்த நிலை உருவாக வேண்டும் என்றால் காவல்துறையினர் மட்டுமே முடியும் என்பதனால் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

விழாவில் தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர்

இந்த சமுதாயத்தை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும். அது காவல் துறைக்கும், அலுவலகத்துக்கும் பொருந்தும்.

காவல்துறை பெரும்பாலும் நல்லது செய்தும் கெட்டப் பெயரை வாங்கும் நிலை இருக்கிறது. காவல்துறை சட்டையின் மீது ஒரு மரியாதை இருக்கிறது. காக்கி சட்டைகளுக்கு உள்ளும் இதயம் இருக்கிறது.

உங்களுக்கு என்னென்ன உயர்வுகள் நியாயமாக கிடைக்க வேண்டுமோ அந்த உயர்வுகள் கிடைப்பதற்கு துணைநிலை ஆளுநரின் அலுவலகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். இன்னும் பல பதவி உயர்வு , இடமாற்றங்கள், இடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் முதலமைச்சரும், துறை அமைச்சரும் வைக்கும் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை. நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு உயர் அதிகாரிகளையும் பாதுகாத்து வருகிறீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இதை நான் எடுத்துக் கொள்கிறேன். பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நம் மீது அன்பு, நம்பிக்கை வைக்க வேண்டும்.

இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இளைஞர்களின் கலாச்சார சீர்கேடுகளை காப்பாற்ற வேண்டிய பங்கையும் நாம் சரியாக கையாள வேண்டும்.

ஒவ்வொரு இளைஞனை பார்க்கும்போது அவரின் அப்பாவாகவும், சகோதரனாக நீங்கள் மாற வேண்டும். மக்கள் உங்களை கொண்டாட வேண்டும் எப்பொழுது நாங்கள் உங்களை கொண்டாடுவோம் என தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம்

3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா