அரசியலுக்கு வரும் நடிகர் சத்ய ராஜ் மகள் திவ்யா… பாஜக..வுக்கு நோ… அப்ப… தளபதி கட்சிக்கு
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சினிமா பிரபலங்கள் வாரிசுகள் அனைவரும் சினிமா துறையை தேர்ந்தெடுக்கும் நிலையில் சத்யராஜின் மகள் மட்டும் மருத்துவம் படித்து ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் மகிழ்மதி என்ற ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பல உதவிகளை செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது என்று ஒரு போட்டு போட்டார் ….
நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள் எந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்கள் பாராளுமன்ற தேர்தலில் நிற்பீர்களா அல்லது மேயர் பதவிக்காக போட்டியிடுவீர்களா என்று பல கேள்விகளை ஊடகங்கள் கேட்கப்பட்ட பொழுது அவர் விளக்கம் அளித்ததாவது.
நான் அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிப்பதற்காகவோ அல்லது பதவியை பிடிப்பதற்காகவோ அல்ல ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே… நான் கடந்த மூன்று ஆண்டுகளாக மகிழ்மதி என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன்.
அதில் ஏழை எளிய மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இலவசமாக நான் வழங்கி வருகிறேன்.
அதனால் நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. என்னை ஒரு தலைவர் அவர்கள் கட்சியில் இணையுமாறு அழைத்தது உண்மைதான் ஆனால் நான் ஒரு மத சம்பந்தப்பட்ட கட்சியில் இணைய விரும்பவில்லை தனி கட்சியும் அமைக்கப்போவதில்லை.
நான் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சியில் இணையப் போகின்றேன் என்பதை பிறகு அறிவிப்பேன் என்று கூறினார். அவர் மத கட்சி என்று கூறியது பாஜக கட்சி தான் என்று வலைதளங்களில் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.