விளிம்புநிலை மக்களையும் கைபிடித்து மேலே தூக்கிவிடும் ஆட்சிதான் திமுக ஆட்சி – நரிக்குறவர் களுக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 54 குடியிருப்புகளை ஒப்படைந்து மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரி ஓடை கிராமத்தில்பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி தற்காலிமாக வசித்து வந்த நரிக்குறவர்களை கண்டறிந்து அவர்கள் ஒரு நிரந்தர இடத்தில் தங்கியிருந்து தொழிலுக்கு செல்லும் வகையில்,மாவட்ட கனிமவள நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியிலிருந்து ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 54 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இன்று அவர்களிடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சருக்கு நரிக்குறவ இன மக்கள் பாசி அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் நரிக்குறவர் இனமக்கள் இருப்பதை அறிந்து அவர்களுக்கு இன்று 54 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஓட்டுக்காக உதவி செய்யும் வழக்கம் திராவிடமாடல் ஆட்சிக்கு கிடையாது என்றும் நரிக்குறவர் இனமக்கள் தனக்கு வழங்கியது பாசி அல்லது அது பாசம் என்றும் விளிம்புநிலை மக்களையும் கைபிடித்து மேலே தூக்கிவிடும் ஆட்சிதான் திமுக ஆட்சி என்றார் இதற்கு பின்னதாக நான்கு கோடி மதிப்பிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா கட்டும் பணிக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி சேர்மன் செந்தில் மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன் ஒன்றி கவுன்சிலர் கண்ணன் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்….