பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்(89) காய்ச்சல் மற்றும் மார்புத் தொற்று சிகிச்சைக்காக மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரதீபா பாட்டீல் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார். அவர் 2007 முதல் 2012 வரை உயர்மட்ட அரசியலமைப்பு பதவியை வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.