in ,

நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு


Watch – YouTube Click

நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

 

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி புகார் எழும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மதுரை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்து செயல்பட்டது. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், இரட்டிப்பு தொகை தரப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதை நம்பி பொதுமக்கள் 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமினின் வெளியே வந்த இவர்கள் தற்போது வழக்கை நீர்த்துப் போகும் விதமாக
தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகரை சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் என்ற இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பி செல்வன், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 26 நிறுவனங்களின் வங்கி கணக்கு பரிமாற்றம் முழுமையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 முக்கிய வங்கி கணக்குகளில் இருந்த பணம் 40 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, இது போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளை விட பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை தான் முக்கியத்துவம் கொடுத்து பார்க்க வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு?

முதல்முறையாக நியோமேக்ஸ் வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது விநோதமாக ஆச்சிரியமாக உள்ளது. இந்த நிதிநிறுவன மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்து விடக்கூடாது.

மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பித்துவிடலாம் என்ற நினைப்பவர்கள் மீது
கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும். நிதிநிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது.

நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உள்துறை செயலகத்துக்கும், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது. ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படும் எனவும் நீதிபதி கூறினார்.

மேலும், நியோமேக்ஸ் நிறுவன வங்கி கணக்கு, வங்கி கணக்கில் உள்ள பண விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

விபத்தில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேர் திருவிழா