in

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் விமர்சனம்


Watch – YouTube Click

இட ஒதுக்கீடு அறவே வேண்டாம் என்கிற கட்சி பாஜக, இட ஒதுக்கீட்டிலே பொறந்து வளர்ந்தவரு ராமதாஸ்: கொள்கை இல்லாத கூட்டணி பாஜக- பாமக கூட்டணி நாகையில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் விமர்சனம்

நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக வேதராண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். நாகை அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதராண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

வேட்பாளரை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிக அளவில் புளங்கி வருவதாக குற்றம் சாட்டியவர் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறியவர்கள் இதுவரை கொண்டு வரவில்லை என்றும் இதனால் அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர் என்றார் தொடர்ந்து பேசியவர் இட ஒதுக்கீடு என்றாலே அறவே வேண்டாம் என்கின்ற கட்சியோடு இட ஒதுக்கீட்டிலே பிறந்து வளர்ந்த ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இது கொள்கையே இல்லாத கூட்டணி என்றும் அன்புமணி ராமதாஸ் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவே கூட்டணி வைத்துள்ளார்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.இதில் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி , புதிய தமிழகம் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

வார்த்தையால என்ன கொல்லாதீங்க ப்ளீஸ் அந்த மாதிரி நான் எந்த தப்பும் செய்யல … அறந்தாங்கி நிஷா

முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை