குஜராத் டைட்டன்ஸ் அணியில் 5 ஆவது தமிழர்
ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் அந்த அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதால் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த சந்தீப் வாரியர் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக சந்தீப் வாரியர் விளையாடியுள்ளார். குஜராத் அணியில் இணைந்துள்ள 5வது தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஆவார். ஏற்கனவே விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாரூக் கான் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.