புதுச்சேரியில் அனைத்து சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பினர் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் சித்தானந்தம், புதுச்சேரியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அவ்வாறு தேர்தலில் நிற்கும் இளைஞருக்கு எங்களது முழு ஆதரவு தருவோம் என என கோரிக்கை வைத்திருந்ததாக தெரிவித்தார்.
முன்னுரிமை கொடுக்கும் வேட்பாளருக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தருவோம் என ஏற்கனவே கூறி இருந்ததாகவும். அதன்படி இந்த முறை இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் இளைஞரான தமிழ்வேந்தனுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு பிரச்சாரம் செய்வோம் என கூறினார். இந்நிலையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞரான தமிழ்வேந்தனுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளதாகவும், எனவே எங்களது கூட்டமைப்பு அவருக்கு முழு ஆதரவை வழங்குகிறோம் என்றும், அவரை வெற்றி பெற வைக்க பாடுபாடுவோம் என கூறினார். எங்களது கூட்டமைப்பினர் கோரிக்கைகளான மாநில அந்தஸ்து உள்ளிட்டவை அனைத்தும் அதிமுகவின் வேட்பாளரின் வாக்குறுதிகளாக உள்ளது எனவே அவருக்காக நாங்கள் பணி செய்வோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாராளுமன்றத்தில் எங்களை போன்ற இளைஞர்களுக்காக போராடவும், பேசவும் ஒரு நபர் கிடைத்துள்ளார். எனவே எங்களது கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனின் வெற்றிக்காக பாடுபாட்டு பிரச்சாரம் செய்வோம் என கூறினார்.