இந்த காலத்து நடிகைகளுக்கு தொழில் மேல பக்தியே கிடையாது… அன்று சொன்ன நடிகை சாவித்திரி
தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியல் ஆண்கள் மட்டுமே கொடி கட்டி பறந்த காலத்தில் சிங்க பெண்ணாக நுழைந்தவர் நடிகை சாவித்திரி.
1950 இல் இவர் நடிக்க வந்த பொழுது நிறைய ப்ரொடக்ஷன் யூனிட்கல் இல்லை ஆனால் புதுமுக நடிகையான சாவித்திரி வந்த உடனே எட்டு படங்களில் நடித்தார்.
அந்த காலத்துல கதை தான் முக்கியம் கதை வசனம் எழுதிட்டு எல்லாம் ஆர்ட்டிஸ்ட்டையும் யூனிட்டுக்கு வர சொல்லி ரெண்டு மூணு மாசம் ரிகர்சல் கொடுப்பாங்க ஆனால் இப்போ இருக்கிற புது முகங்கள் வரும்போதே கையில் நாற்காலியோடு வந்து ஏசியை போட்டு ஒரு ஓரமா ஒக்காந்துடுறாங்க தனக்கு தான் எல்லாமே தெரியும் என்ற பந்தாவோடு கையில் ஆங்கில புத்தகத்தை வைத்துக்கொண்டு செட்டுக்குள்ள உட்காந்துடுவாங்க.
ஆனால் இப்போ எல்லோருடைய Portion …னும் மனப்பாடமா இருக்கணும் அப்பதான் ஷூட்டிங் ஆரம்பிப்பாங்க.
நான் இப்ப இருக்குற ஆர்ட்டிஸ்ட் ஒரு சீனுக்கு என்ன டிரஸ் பண்ணனும் ஹேர் ஸ்டைல் போடணும் அப்படின்னு பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க. அந்த காலத்துல புதுமுகம் வந்தா முதல்ல ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க மாட்டாங்க டயலாக் பேப்பரை கொடுத்து மனப்பாடம் பண்ணிட்டு வர சொல்லுவாங்க ஆனா இப்ப இருக்குற ஆர்டிஸ்ட் எல்லாம் மேக்கப் போட்டுட்டு நேரா செட்டுக்குள்ளே வந்துடுறாங்க வரும்போது ஷார்ட் ரெடியான கேக்குறாங்க.
அனுபவம் வாய்ந்த சீனியர் நடிகைகள் இருக்கும் பொழுது அவர்களுக்கு மரியாதைகாக கூட ஒரு ஹாய் சொல்ல மாட்டாங்க நாங்க சிவாஜி சாரோட நடிக்கும் போது யார் ஸ்டூடியோவில் முதலில் இருக்கணும்னு போட்டி நடக்கும் அந்த அளவுக்கு தொழில் மேல எங்களுக்கு பக்தி இருந்தது.
தொழில் மேல மட்டும் இல்ல … அந்த காலத்துல தயாரிப்பாளர்கள் மேலயும் டைரக்டர் மேலயும் நடுக்கம் இருக்கும் ஆனா இப்ப இருக்கிற புது முகங்களும் கேமிரா லைட் எல்லாம் எங்க மேல விழக்கூடாது ஸ்கின் எல்லாம் Tan ஆயிடும் அப்படின்னு சொல்லிட்டு கேமரா நம்ம சைடு வரும் போது மட்டும் எழுந்து நிற்கலாம்னு சொல்லிட்டு ஒரு ஓரமா ஒக்காந்துருவாங்க.
எங்களுக்குன்னு தனியா ஒரு நாற்காலியை நாங்க எடுத்துட்டு வரம் பழக்கத்தையே நாகேஸ்வரராவு சார் தான் முதன் முதலில் ஏற்படுத்தினார். அது கூட தயாரிப்பாளர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது அப்படின்னு சொல்லிட்டு தான் நாங்க வரும்போது எடுத்துட்டு வருவோம். ஆனா அந்த நாற்காலி எடுத்துனு வருவதற்கு முதல்ல நான் அவ்வளவு பயந்தேன் யார் என்ன சொல்லுவாங்கலோ..இன்னு ஆனா இப்ப எல்லாம் ஷூட்டிங்ல கார்லயே AC போட்டு உக்காந்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு இந்த காலத்து நடிகைகள் பற்றி தன் மனக்குறைகளை சாவித்திரி அம்மா 1975 ..யில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.