பிரிட்டனில் சாலை விபத்துக்கு AI தீர்வு
பள்ளங்கள் இல்லாத சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, பெரும் சேதம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை வெளிநாடுகளிலும் காணப்படுகிறது.
சற்று கவனம் தவறினால் சாலை விபத்து ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.
விபத்து ஏற்பட்டதற்கு சாலையில் இருந்த பள்ளம்தான் காரணம் என்று வழக்கு தொடர முடியாது. இந்தப் பிரச்னைக்கு பிரட்டனில் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், கணினியில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏஐ தற்போது முதல் முறையாக சாலை பள்ளங்களை சரி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ, சாலைகளில் உள்ள பள்ளங்களை தானாக கண்டறிந்து சரி செய்து விடுகிறது.
பிரிட்டனில் உள்ள லிவர்ஃபூல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹெட்போர்ட்ஷைர் நகரத்தினர் இந்த ரோபோவை தயாரித்துள்ளனர்.
“ரோபோடிஸ்3டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ சாலையில் உள்ள பள்ளங்களைத் தானாகக் கண்டறிந்து ஆராய்ந்து அந்தப் பள்ளத்தை சரி செய்கிறது. பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ரோபோ வாகனத்தில் சாலையை சீரமைப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
உலகின் முதல் ஏஐ பொருத்தப்பட்டுள்ள சாலை சரி செய்யும் ரோபோ இதுவாகும். இந்தியாவில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டால் இதன் தேவை பல மடங்கு பெருகும் என்பது நிச்சயம்.