in

பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்றம் செல்லவில்லை மக்கள் உரிமைக்காக செல்வேன்


Watch – YouTube Click

பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்றம் செல்லவில்லை மக்கள் உரிமைக்காக செல்வேன்

 

நாகை நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவிவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாகை, சிக்கல், ஆளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆழியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா வர்த்தகர்களிடம் கடைகடையாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு சலவை கடை வைத்திருந்த பெண்மணியிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா துணிகளுக்கு இஸ்திரி செய்துகொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பூக்கடை வைத்திருந்த பெண்ணிடம் அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகளுக்கு பூ வாங்கி கொடுத்த வேட்பாளர் மளிகை கடை, மெக்கானிக் ஷாப் , டீக்கடைகளில் மைக் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்திற்கு பிரதமரை தேர்வு செய்ய செல்லவில்லை என்றும் தமிழகத்தின் உரிமைகளை மீட்க நாடாளுமன்றத்தில் சண்டை செய்யவே செல்ல உள்ளதாகவும்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களை தடை செய்யவும், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தடுத்து நிறுத்தவும். என்னை போல் மக்கள் பிரச்சனைகளை முதலமைச்சர் ஐந்து நிமிடம் பேசினால் தான் அரசியலை விட்டு விலகிக் கொள்வதாக முதலமைச்சருக்கு சவால் விட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

இலவச உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

வாக்குக் கணிப்புகளை வெளியிட தடை