ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு நிதி திரட்டும் ஓவிய பெண்மணி
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த இளைஞருக்கு நிதி திரட்டும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவிய பெண்மணி அறிவழகி ரங்கோலி வழங்கி நிதி திரட்டி வருகிறார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ஓவிய பெண்மணி அறிவழகி. இவர் தலைவர்கள், நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்களின் உருவங்களை கோலமாவுகளை கொண்டு ரங்கோலியாக வரைந்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் சாலமன். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது. சாலமன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய 35 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனவே அவருக்கு நிதி திரட்டும் வகையில் புதுச்சேரி ஓவிய பெண் அறிவழகி தனது வீட்டில் கலர் கோலமாவுகளை கொண்டு சாலமனின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அறுவை சிகிச்சை செய்ய நிதியுதவி கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த ரங்கோலி வைரலாகி வருகிறது.