அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது விரும்பி வந்து எம்ஜிஆர் பாடலை பாடிய மூதாட்டி…
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது விரும்பி வந்து எம்ஜிஆர் பாடலை பாடிய மூதாட்டி… கூடியிருந்த வாக்காளர்கள் கைத்தட்டி உற்சாகம்…
புதுச்சேரியின் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மங்கலம் தொகுதியில் இன்று மாலை வாக்கு சேகரித்தார்.
அப்போது திருக்காஞ்சி அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கீழே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் தான் மேலே வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனே அவரை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மேலே ஏற்ற அந்த மூதாட்டி எம்ஜிஆரின் பாடலை பாடினார்.
“நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தாங்க” என்ற பாடலை அவர் பாட கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர். மூதாட்டியை பாராட்டி அதிமுக சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்..