மதுரை எய்ம்ஸ் செங்கலை நான் எப்பொழுது தருவேன் உதயநிதி புதிய விளக்கம்
திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவாக மணப்பாறை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாநில இளைஞரணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் ஜோதிமணி அவர்களுக்கு கை சின்னத்தில் பட்டனில் வைக்கும் ஒரு ஒட்டு – மோடிக்கு வைக்கின்ற வேட்டு.
சென்ற முறை ஜோதி மணிஅவர்களுக்கு சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள் இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால்
நான் மாதத்தில் இரண்டு முறை கரூர் மாவட்டத்திற்கு வந்து இங்கு உள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு இங்கு உள்ள கோரிக்கைகள் அனைத்தும் தமிழகம் முதல்வரிடம் கொண்டு சென்று தீர்த்து வைப்பேன் என்றும், மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன்.
நான் கலைஞர் பேரன் செய்வதை சொல்வேன் சொன்னதை செய்து உள்ளேன் கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதி மணப்பாறை பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி கட்டி தரப்படும் என கூறினேன் அது தற்பொழுது நிறைவேற்றி உள்ளேன்.
அதேபோல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றி உள்ளேன் மற்றும் மணப்பாறை வையம்பட்டி பகுதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பிரதமருக்கு நான் புதிதாக வைத்திருக்கும் பெயர் 29 பைசா ஆனா பெயர் வைத்துள்ளேன் ஏன் தெரியுமா நாம் காட்டுகின்ற ஜிஎஸ்டி வரி ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 29 பைசா மட்டுமே தருகின்றது.
மற்ற பிஜேபி ஆளுகிற மாநிலங்களில் ஏழு ரூபாயும் உத்தரப்பிரதேசத்தில் மூன்று ரூபாயும் வழங்கப்படுகிறது தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றார் அதனால் அவருக்கு அவருக்கு நான் வைக்கப்பட்டுள்ள பெயர் 29 பைசா (29 பைசா போட்டோவை காட்டி பேசினார்).
அடுத்ததாக எய்ம்ஸ் தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரு செங்கலை மோடியும், எடப்பாடியும் வைத்தனர், அந்த செங்கலை நான் எடுத்து வந்துள்ளேன் ஏனென்றால் தற்பொழுது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை அதற்கு பின்னால் மற்ற மாநிலங்களை தொடங்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு மதுரையில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் ஒரு செங்கலையும் நான் எடுத்து வந்துள்ளேன் அது எப்பொழுது தருவேன் என்றால் இவர்கள் கட்டி முடிக்கும் பொழுது கேட்டால் அந்த செங்கலை தருவேன் என AIMS என்று எழுதிய செங்களை காட்டி பேசினார்.