100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் என 100 சதவீதம் வடிவில் நின்று உறுதி மொழி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களவை பொதுத் தேர்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாரயணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகள் 100 சதவீதம் வடிவில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி உள்ள அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு இந்திய தேர்தல் குறித்தும் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நேர்மையான முறையில் வாக்களிக்கவும், வாக்களிக்கும் உரிமையை விற்காமல் ஓட்டளிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒருவிரல் புரட்சி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்திட்ட அலுவலர் பார்கவி, கல்லூரி தாளாளர் ரங்கபூபதி, கல்லூரி செயலாளர் ஆர்.பி.ஸ்ரீபதி, கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.