இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா
புதுச்சேரி இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது தொடர்ந்து பெண்களின் வாழ்வில் கல்வி என்னும் `ஒளி சுடர்விட்டு பிரகாசிக்கும் வண்ணமாய்த் திருவிளக்கு ஏற்றப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் பாத்திமா அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார்.
ஒவ்வொருத் துறையிலும் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு
மார்ட்டினா மேரி- உயிர்வேதியல்துறை, கிருஷ்ஷேணி-கணிதத்துறை, மாளவிகா-வணிகவியல்துறை அபர்ணா-கணினித்துறை, ஜனனி- ஆங்கிலத்துறை ஆகிய ஐந்து இளங்கலைத் துறை மாணவிகளுக்கும் மீரா முதுவலை கணிதத்துறை, உ.மாதேவி-முதுகலை ஆங்கிலத்துறை ஆகிய இரண்டு மாணவிகளுக்கும் மொத்தம் ஏழு மாணவியருக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற 484 மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களும், கௌரவ விருந்தினர் அவர்களும், கல்லூரி முதல்வர் அவர்களும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீ.சமீர் சுவருப் நெய்வேலி, பழுப்பு நிலக்கரி சுரங்கம், மனிதவளத்துறை இயக்குநர் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய மாணவிகளுக்குக் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். கௌரவ விருந்தினாாக வெங்கட்ராமன் தினமலர், பதிப்பு மற்றும் வெளியீட்டின் பொறுப்பாளர் அவர்கள் உரையாற்றுகையில் பெண்களின் மதிப்பை அவர்களின் கல்விதான் நிர்ணயிக்கிறது எனவே எச்சூழலிலும் கல்வியைக் கற்று வாழ்வில் பயன்பெற வேண்டும் அதற்கு இதயா மகளிர் கல்லூரி உறுதுணையாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்பதை எடுத்துரைத்தார்.
முனைவர். தியாகராஜன் பேராசிரியர் பண்ருட்டி அவர்கள் வாழத்துறை வழங்கினார். முனைவர். சந்திரசேகரன் பேராசிரியர் நெய்வேலி அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்தார். இமாகுலேட் சபை அருட்சகோதரிகள், அருட்தந்தையர்கள், பெற்றோர்கள் அனைவரும் வருகை புரிந்தனர். விழாவில் கலந்து கலந்து கொண்டனர்..