in

நான் அவர் மகளாக வாழ ஆசைபடுகிறேன்.. மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை… சக்தி மகேந்திரா


Watch – YouTube Click

நான் அவர் மகளாக வாழ ஆசைபடுகிறேன்.. மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை… சக்தி மகேந்திரா

பன்முக திறமையாளரான பாலுமகேந்திரா இயக்குனர் மட்டும் அல்ல ஒளிப்பதிவாளர், ஆசிரியர், எடிட்டர் என பல அடைமொழிகளை அவருக்கு கொடுக்கலாம்.

இந்த சிற்பியில் இருந்து வெளிவந்த முத்துக்கள் தான் இயக்குனர் பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் .

சமீபத்தில் பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகளான சக்தி மகேந்திரா ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதாவது …எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதால் என் அம்மா பாலு மகேந்திராவிடம் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் அவர் வீட்டுக்கு சென்ற போது வா மகளே வா என்று என்னை அன்புடன் அழைத்தவர் சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியவுடன் என்னை புகைப்படம் எடுக்க அனுப்பினார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து என்னை அழைத்தவர் எனக்கு பெண் குழந்தை இல்லை அதனால் உன்னை என் வளர்ப்பு மகளாக தத்தெடுக்க ஆசைப்படுவதாக என் அம்மாவிடம் கூறினார்.

2010 ஆம் ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரை அவர் கூட தான் நான் இருந்தேன் நான் அவரை சந்திக்கும்போது எனக்கு வயது 11 என் அப்பா இறந்த சில மாதங்களிலேயே என் மீது அதிகம் பாசம் காட்டி என்னை நன்றாகவும் கவனித்துக் கொண்டார்.

ஆனால் வெளியில் இருப்பவர்கள் இந்த வயதில் உனக்கு ஒரு பெண் கேட்கிறதா என்று எங்கள் இருவரையும் தவறாக பேசினார்கள். அவர் குடும்பத்திலும் என்னை தவறாக பேசினார்கள். இந்த விஷயம் எனக்கும் அவருக்கும் நன்றாக தெரியும் ஆனால் எங்களுடைய ரிலேஷன்ஷிப்பை பற்றி நாங்கள் யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை நான் என்றும் அவர் மகளாகவே தான் வாழ ஆசை படுகிறேன் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

 அடிப்படை வசதிகள் இல்லை நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும்  எதிர்ப்பை தெரிவிக்கும் பொதுமக்கள்

மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார்