மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 நாட்களாக கண்ணாமூச்சி ஆடிவரும் சிறுத்தை, இன்றும் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் வனத்துறை விரக்தி :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை காவிரி பழங்காவிரி மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது இதனை பிடிக்க கூண்டுகள் வைத்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சி வாய் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது நேற்று சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் நண்டல ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பொருத்தப்பட்டிருந்த கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை காஞ்சி வாய், கருப்பூர், பேராவூர் ஆகிய பகுதிகளில் நண்டலாறு மற்றும் மஞ்சுளா ஆற்றின் கரை பகுதியில் அமைத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் இன்று காலை கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில் அதற்கு பொறி வைப்பதற்காக கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த ஆடுகளை உணவளிப்பதற்காக வனத்துறை மீண்டும் எடுத்துச் சென்றனர். மேலும் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆற்றங்கரை ஓர பகுதிகளில் சிறுத்தையின் கால் தடங்கள் தென்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த எட்டு நாட்களாக வனத்துறை கண்ணில் மண்ணை தூவி விட்டு போக்கு காட்டி வரும் சிறுத்தை வனத்துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது