in

திருவாரூர் அருகே தயாருக்காக மகன் கட்டிய தாஜ்மஹாலில் 11ந்தேதி ரம்ஜான் தொழுகை நடைபெறுகிறது நிர்வாக கமிட்டி அறிவிப்பு


Watch – YouTube Click

திருவாரூர் அருகே தயாருக்காக மகன் கட்டிய தாஜ்மஹாலில் 11ந்தேதி ரம்ஜான் தொழுகை நடைபெறுகிறது நிர்வாக கமிட்டி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு 5 கோடி செலவில் கட்டப்பட்ட தாஜ்மஹால் பள்ளி வாசலில் இந்தாண்டு ரம்ஜான் தொழுகை நடத்தப்படும் என நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர் ஜெய்லானி பீவி தம்பதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன்.அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன் மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்துள்ளார்.

இதில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ முடித்து விட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார்.சிறுவயது முதல் தன்னை தனது அம்மா அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது அன்னையின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் அவர் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தத்தளித்து வந்த நிலையில் இறந்த தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்ட போது அம்மாவிற்கான நினைவுச்சின்னத்தை தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு ராஜஸ்தானில இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் இந்த நினைவு இல்லத்தை அரும்பாடுபட்டு கட்டியுள்ளனர்.இந்த தாஜ்மால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா சென்ற ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்த நினைவு இல்லத்தை எம் மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். ஐந்து வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த செய்தியை அறிந்த பல்வேறு பகுதியிலிருந்து இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்கின்றனர்.

இந்தநிலையில் ரமலான் மாதம் சென்ற மாதம் துவங்கி நடந்தது வந்த நிலையில் 10ந்தேதி ரமலான் நோன்பு நிறைவு பெறுகிறது. 11ந்தேதி ரம்ஜான் பண்டிகையாகும். இந்தநிலையில் இந்த தாஜ்மகாலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை 11ந்தேதி காலை 8.30 மணிக்கு தொழுகை நடைபெறும் என அதன் நிர்வாக லீவா உல் ஹம்து சாரிடபுள் டிரஸ்ட் அறிவித்துள்ளது. அதற்க்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மட்டுமின்றி சுற்றுபகுதி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்


Watch – YouTube Click

What do you think?

யார் இந்த ஆர்.எம்.வீ ?

புதுச்சேரி அதிமுக பரப்புரையின் போது வயதான பெண்கள் ஆட்டம்