in

தென் கொரியா தேர்தலில் எதிர்க்கட்சி அபார வெற்றி


Watch – YouTube Click

தென் கொரியா தேர்தலில் எதிர்க்கட்சி அபார வெற்றி

தென் கொரியா நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 300 தேசிய சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆளும் மக்கள் சக்தி கட்சி பல்வேறு இடங்களில் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 175 இடங்களை கைப்பற்றி அருதி பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

அதேநேரம், ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி வெறும் 109 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றொறு எதிர்க்கட்சி 12 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் முழு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அதிபராக மக்கள் சக்தி கட்சியின் யூன் சுக் இயோல் பதவியேற்றுக் கொண்டார்.

அவரது பதவிக் காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தேசிய சட்டப்பேரவையை எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகம் கைப்பற்றி இருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அவர் நாட வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தீவிர பரப்புரை. பெண்கள் பூசணிக்காய் சுற்றி உற்சாக வரவேற்பு.

காவல் துறையினர் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்தனர்