in

அரியலூரில் தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தையா


Watch – YouTube Click

அரியலூரில் தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தையா

 

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி தென்பட்ட சிறுத்தையை பத்தாவது நாளாக தேடும் வனத்துறை சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இறுதியாக சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காஞ்சி வாய் பேராவூர் கருப்பூர் பகுதிகளில் மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தின் பகுதிகளிலும் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

இதனால் மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை அரியலூர் மாவட்டம் சென்றதாக செய்திகள் வெளியாகின இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமரிடம் நாம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, நான்கு நாட்களாக எந்தவித உறுதி செய்யப்பட்ட தகவலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிடைக்கவில்லை என்றும் இதனால் சிறுத்தை இடம்பெயர்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது, இருந்தாலும் கண்காணித்து கேமரா மற்றும் வேறு சில தடயங்களை ஒப்பிட்டு பார்த்து கண்டறிவோம் என்றும் அதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு குண்டுகள் மற்றும் 20 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருவார்கள்.

இன்று இரண்டு கூண்டுகளை மட்டும் அரியலூருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு….