பாஜக ஆதரித்து காமெடி நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து காமெடி நடிகர் செந்தில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்,
முதலமைச்சர் ரங்கசாமியை சின்ன காமராஜர் என்று குறிப்பிட்டார். தமிழகத்தை விட புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்துவதற்காக பாராட்டினார்.
எடப்பாடி நான்கரை வருடம் இருந்தார் இவருக்கு யார் பதவி கொடுத்தார். மோடி தான். இந்த நான்கரை வருடத்தில் எத்தனை லட்சம் கோடி சாப்பிட்டு இருப்பார. அப்படிலாம் சாப்பிட்டு விட்டு இப்ப மோடியை யார் என்று கேட்கிறார்.
நீங்கள் ஓட்டு போட்டால் உங்களையும் யார் என்று கேட்பார். சசிகலா தான் அவரை முதல்வராக கை காட்டினார். அவரையே யார் என்று கேட்டவர் எடப்பாடியார். நன்றி கெட்டவர் எனவும் செந்தில் பேசினார்.
வந்தே பாரத் ரயிலின் பெயரை கூட தெரியாமல் அருகில் இருந்த பாஜகவினரிடம் அது எந்த ரயில் என்று கேட்டு பிறகு “வந்தே பரத்” ரயில் எல்லாம் விடுகிறார்கள் என்று கூறினார்.
ஜிஎஸ்டி, நீட் கொண்டுவந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம் தான். ஆனால் அதை மறைத்து பாஜக அரசின் சாதனைகளை மறைத்தும் எதிர்கட்சிகள் வாழைப்பழ காமெடி செய்கிறார்கள் என செந்தில் கூறினார்.
மத்தியில் பாஜக கூட்டணி 400இடங்களை பெறும்.ஆனால் இங்கு 40இடங்கள். நாம் ஏமார்ந்து கொண்டு இருகிறோம் என்றும் நடிகர் செந்தில் குறிப்பிட்டார்.
எடப்பாடியார் ஒத்த விரலில் ஓங்கி அடிப்பாராம். மற்ற விரல்களில் சிரங்கு பிடித்துவிட்டதா எனவும் செந்தில். பேசினார்.