in

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோடி திண்டுக்கல் ஐ லியோனி சாடல்


Watch – YouTube Click

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோடி திண்டுக்கல் ஐ லியோனி சாடல்

 

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், மங்கைநல்லூர், கோமல் ஆகிய பகுதிகளில், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதாவை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பிஜேபி அரசு இதுவரை சொன்ன பொய் வாக்குறுதிகளுக்கு ஒரு புத்தகமே வெளியிட்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோடி என்று சாடினார் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் இந்தியா கூட்டணி இளம் தலைவர் ராகுல் காந்தி ஆட்சி அமைந்தவுடன் 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் மகளிர்க்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றி அமைக்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் 400 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் குடிதாங்கி என அழைக்கப்படும் பாமக தலைவர் ராமதாஸ் இன்று மோடியுடன் கைகோர்த்து பாரத் மாதா கி ஜே என முழக்கம் விடுகிறார் என கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் வேட்பாளர் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் துவங்குகிறது